முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன் தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      இந்தியா
udayanidhi hamanath

Source: provided

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிராமணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜார்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வென்றன. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதையடுத்து, ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ராஞ்சியில் நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தேசிய தலைவர் சிபு சோரன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4-வது முறையாக ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் வாழ்க்கை புத்தகத்தை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து