முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு: ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் புதிய உச்சம் வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி முர்மு பெருமிதம்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Murmu-

Source: provided

ஊட்டி: ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும், இப்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது,'' என்றும் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு, 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த கல்லுாரியில், 26 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

நமது எல்லைகளை பாதுகாக்க அரும்பணியாற்றும் ராணுவத்தினரின் சேவையை எண்ணி, நாடு பெருமை கொள்கிறது. தேசத்துக்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர். தேசம் காக்கும் பணிக்கு அவர்களை அனுப்பி வைத்த வீரர்களின் குடும்பத்தாருடைய நாட்டுப்பற்றையும் நான் பாராட்டுகிறேன். இன்று இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது.

உலகமே அதை அங்கீகரிக்கிறது. ஆத்மநிர்பர் பாரத் என்ற அடிப்படையில், இந்தியா எதிர்கால சவால்களை சமாளிக்கும் நோக்கில், பல்வேறு தளவாடங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நமது பாதுகாப்பு தொழில் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

தற்போது இந்தியா, 100 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் 30 மடங்கு ராணுவ தளவாட ஏற்றுமதி இப்போது அதிகரித்துள்ளது. வேகமாக மாறி வரும் புவி அரசியலில், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

புவி அரசியல் சூழல் மாற்றம், பாதுகாப்பு தேவைகளையும் மாற்றி வருகிறது. தேசிய, சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இணையத்தில் நடக்கும் போர், பயங்கரவாதம், காலநிலை மாற்றம் குறித்த சவால்களை சமாளிப்பதற்கும் நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

முன்னதாக, வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவுத்தூணில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவரை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். அவர் ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் இன்று (நவ.,29) சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து