முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீனில் தளர்வு கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Kasthuri-2024-11-04

Source: provided

சென்னை: நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே நடிகை கஸ்தூரி மீது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், எழும்பூர் கோர்ட்டு அவருக்கு ஜாமின் வழங்கியது. அதன் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு, எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, சென்னை எழும்பூர் கோர்ட்டில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து