முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு கலந்தாய்வு தமிழக தேர்வாணையம் தகவல்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
TNPSC 2023-04-20

Source: provided

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3 முறை உயர்த்தப்பட்டு மொத்தம் 9,491 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து நவம்பர் 7-ம் தேதி சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தற்காலிக பட்டியல் வெளியானது.டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாகி, ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் நிறைவடைந்தது. அதனையடுத்து தற்போது கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியானது. குரூப் 4 தேர்வை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதன்படியே சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர்.

முதலில் 6,244 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக 3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டது. எனவே, மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு அக்டோபர் 28-ம் தேதி முடிவுகள் வெளியானது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் நவம்பர் 7-ம் தேதி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் வழியாக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 09.11.2024 முதல் 21.11.2024 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற்றது.

தற்போது சான்றிதழ் பதிவேற்றம் முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்டம் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், தேர்வாணையம் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கலந்தாய்வு 2024 அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து