முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச ஆன்மீக தலைவர் கைதான வழக்கு ஜன. 2-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      உலகம்
Krishna-Das 2024-12-03

Source: provided

 

டாக்கா: வங்கதேச ஆன்மீக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைதான வழக்கு ஜனவரி 2-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சமிலிட்டா சனாதனி ஜோட் என்ற இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது கடந்த அக்டோபர் 30-ம் தேதி வங்கதேசத்தில் உள்ள சத்தோகிரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அங்கு நடந்த இந்து மத ஊர்வலத்தின் போது வங்கதேச கொடி அவமதிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சத்தோகிரம் கோர்ட்டில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இதனிடையே வங்கதேசத்தில் இந்து மத ஆன்மிக தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சத்தோகிரம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை வரும் ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை சின்மய் கிருஷ்ண தாஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து