முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிய முன்னெச்சரிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Eps   2024-12-03

Source: provided

 

சேலம்:  வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை தி.மு.. அரசு எடுத்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அ.தி.மு.. பொதுச் செய்லாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் அ.தி.மு.. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கந்தம்பட்டி பை-பாஸ் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமணமுத்தாற்றின் கரையோரம் இருக்கின்ற வீடுகளில் பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் சீரங்கன் தெரு, மீனாட்சிபுரம், சிவதாபுரம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.

சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தை தாண்டி மழை வெள்ளம் செல்லக்கூடிய நிலை உள்ளது.

அல்லிக்குட்டை, கொண்டலாம்பட்டி பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.ஏற்காடு மலைப் பகுதியில் பெய்த மழை, சேலம் மாநகரத்தில் பெய்த மழை ஆகியவற்றின் காரணமாக இத்தகையை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அந்தந்த பகுதி அ.தி.மு.. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்காடு மலைப் பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் வேகமாக, துரிதமாக மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.  மக்களுக்குத் தேவையான போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மேலும் ஏற்காட்டில் 22 கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளியங்கடை கிராமத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 

திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தி.மு.. அரசு, சேலம் மாநகராட்சி சரியாக செயல்படாத காரணத்தால் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் நகரத்திற்குள், குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. உரிய முறையில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தில் பெஞ்சல் புயலால், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பு உள்ளது.

வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை தி.மு.. அரசு எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இரவு 2 மணிக்கு சாத்தனூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை எந்தவித முன்னறிவிப்புமின்றி திறந்து விட்டனர்.

தொலைக்காட்சியிலோ, நாளிதழ்களிலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு அறிவிப்பும் இல்லை. தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தென்பெண்ணையாற்றின் கரை உடைந்ததால் விழுப்புரம் நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.  அணைகளில் தண்ணீர் திறக்கும்போது உரிய எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்களது உடைமைகளுடன் செல்ல முடியும்.

ஆனால் அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணையாற்றுக் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடுமையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு முறையும் புயல் வரும் போது மத்திய அரசிடம் நிதி கோரப்படுகிறது.

அந்த வகையில் பெஞ்சல் புயலால் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு மத்திய அரசை அணுகி நிதி பெற முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து