முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40-க்கும் குறைவான பந்துகளில் 2 சதங்கள்: டி-20 கிரிக்கெட் போட்டியில் உர்வில் படேல் உலக சாதனை

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      விளையாட்டு
Urvil-Patel 2024-12-02

Source: provided

இந்தூர் : 40-க்கும் குறைவான பந்துகளில் 2 சதங்கள் அடித்து டி20 கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்  இந்திய உள்ளூர் வீரர் உர்வில் படேல்.

182 ரன்கள் குவிப்பு... 

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான குஜராத் அணி, அவ்னீஷ் சுதா தலைமையிலான உத்தரகாண்ட் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சமர்த் ஆர் மற்றும் தாரே அரைசதம் அடித்தனர். குஜராத் தரப்பில் விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

36 பந்துகளில் சதம்.... 

இதனையடுத்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி வெறும் 13.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உர்வில் படேல் 115 ரன்கள் அடித்தார். இவர் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே நடப்பு சீசனில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு வீரரும் படைத்திராத சாதனையை அவர் படைத்துள்ளார்.

மெகா ஏலத்தில்...

டி20 போட்டிகளில் 40-க்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை உர்வில் படேல் படைத்துள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை நடந்து முடிந்த மெகா ஏலத்தில் எந்த அணிகளும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து