முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை: இஸ்ரேல் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

டெல்அவிவ், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு எதிராக மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பாக தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக பிரதமர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்துக்குள் நுழைந்தவுடன் நீதிபதிகளுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். பின்னர், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு மறுப்பு தெரிவித்தார்.

பணக்கார தொழிலதிபருக்கு சலுகை காட்டுவதற்காக, சிகரெட் மற்றும் ஷாம்பென் மதுபானங்கள் லஞ்சமாக பெற்றது, தன்னைப் பற்றிய சாதகமான செய்திகள் வெளியிடுவதற்காக ஊடக நிறுவனம் ஒன்றுக்கு விதிமுறைகளில் சலுகை அளித்தது போன்ற வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை, டெல்அவிவ் நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார். நாற்காலியில் அமர நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், விசாரணை முழுதும் நின்றபடியே, தன் தரப்பு வாதத்தை அவர் முன்வைத்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக எட்டு ஆண்டுகளாக காத்திருந்தேன். இதன் வாயிலாக என் தரப்பு உண்மைகளை முன் வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும், பொய்களின் பெருங்கடல். என் மீது எந்த குற்றமும் இல்லை. ஊடகங்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக இதுபோன்ற பொய் புகார்களை கூறியுள்ளனர் என்று அவர் விசாரணையின்போது தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டு சட்டப்படி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரதமர் பதவி விலகத் தேவையில்லை. அதே நேரத்தில் தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக, பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த வழக்குகளின் விசாரணை, வாரத்தில் மூன்று நாட்களில், தினமும் ஆறு மணி நேரம் நடக்கும். விசாரணை பல வாரங்களுக்கு நீடிக்கும் என, தெரிகிறது.   நீதிமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு  ஆஜரானபோது, அவருடைய ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்கள் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து