முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்க தடை இல்லை: அமைச்சர் சிவசங்கர்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

வணிக நோக்கத்திற்காக (பைக்-டாக்சி) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை நேற்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

மேலும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன விதியை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சிவசங்கரன் கூறியதாவது, 

 பைக் டாக்சிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது. 

இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது. பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. 

இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.

தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம்.  உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து