முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் உரிய நேரத்தில் பெட்ரோல் கசிவு கண்டுபிடிப்பால் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      தமிழகம்
Air

Source: provided

சென்னை: சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் உரிய நேரத்தில் பெட்ரோல் கசிவு கண்டுபிடிப்பால் அதிர்ஷ்டவசமாக 145 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று காலை 11.55 மணிக்கு 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார்.

அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து சரியான நேரத்தில் விமானத்தை விமானி நிறுத்தியதால் 145 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து