முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: ஜகதீப் தன்கர் மீது கார்கே குற்றச்சாட்டு

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      இந்தியா
karke 2023-08-10

Source: provided

புதுடெல்லி: மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது என்று தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கே கூறுகையில், 1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. அனுவம் வாய்ந்த தலைவரை பேசவிடாமல் தடுக்கிறார். ஆளுங்கட்சிக்குப் பேச வாய்ப்பளிக்கிறார். அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். அவையில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்.

இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் செயல்படுகிறார். மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை அக்கட்சி எம்.பி.க்கள் விவாதத்தை எழுப்பினர். அதேநேரத்தில், அதானி லஞ்ச புகார் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்தப் பிரச்னையை ஆளுங்கட்சி எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் விமர்சித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பான நோட்டீஸ்களை நிராகரித்தபோதும், எப்படி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதிக்கிறார் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து