முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2031-க்குள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித்திறன் மும்மடங்காக உயரும் மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: இந்தியாவின் அணுசக்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் இருமங்காக அதிகரித்த நிலையில், 2031-க்குள் இது மூன்று மடங்காக உயரும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித்துறை உள்பட முக்கிய பதவிகளை வகுத்துவரும் அவர் 2014 முதல் மாற்றியமைத்த முன்னேற்றங்களைப் பற்றி அவர் தெரிவித்தார்.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது மொத்த மின்னுற்பத்தி திறன் 4,780 மெகாவாட்டாக இருந்தது. இன்று 2024ல் 8,081 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட திறன், முந்தைய 60 ஆண்டுகளில் எட்டப்பட்டதற்குச் சமமாக உள்ளது என்றார். 2031-32ல் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்து 22,480 மெகாவாட்டை எட்டும். இந்த முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்ப நிபுணத்துவம் மட்டுமல்ல.. அரசியல் விருப்பத்தின் மாற்றமும் காரணம்.

தமிழகத்தில் மின் பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் திட்டத் தாமதங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நியாயமான முறையில் மின்சார விநியோகங்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது 50 சதவீத மின்சாரம் சொந்த மாநிலத்துக்கும், 35 சதவீதம் அண்டை மாநிலங்களுக்கும், 15 சதவீதம் தேசிய மின்திட்டத்துக்கும் ஒதுக்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு பவினி திட்டம் தோரியம் உபயோகத்தைப் பரிசோதித்து வருகிறது, இது யுரேனியம் மற்றும் பிற இறக்குமதி பொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து