முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய 46-வது மகளிர் கைப்பந்து போட்டி: சுழற்சி லீக்போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதி

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      விளையாட்டு
25 DGl-News 1

Source: provided

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று (16.06) சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியில் தேசிய அளவிலான 46வது மகளிர் ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. விளையாட்டு ஆர்வலர்கள் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அணி - கேரளா அணி களுக்கு இடையேயான போட்டி மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் முடிவில் வலிமைமிக்க கேரளா அணியை தமிழக அணி 16:06 என்ற புள்ளி கணக்கில் வென்று சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழக அணியோடு 8 அணிகள் சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

மேலும் பீகாருடன் அணியுடன் போட்டியிட்ட பஞ்சாப் அணி போட்டியின் முடிவில் 13-13 என்ற புள்ளிக் கணக்கில் டிரா ஆனது. திரிபுரா தாத்ரா மற்றும் நகர்ஹவேலியை வென்றது. ஸ்கோர்:16-08.மத்தியபிரதேசம் ஒடிசாவை வென்றது. ஸ்கோர்:23-14. டெல்லியுடன்- சண்டிகர் டிராவில் முடிந்தது ஸ்கோர்:16-16 குஜராத்தை வென்றது கேரளா.ஸ்கோர் 19-09. தமிழ்நாடு மும்பை ஹேண்ட்பால் அகாடமியை வென்றது ஸ்கோர் 10-01. இமாச்சலப்பிரதேசம் சத்திஷ்கரை வென்றது. ஸ்கோர்:15-05. ஹரியானா மகாராஷ்டிராவை வென்றது. ஸ்கோர்: 21-08.கர்நாடகா ஆந்திராவை வென்றது. ஸ்கோர்:12-04. ராஜஸ்தான்  பாண்டிச்சேரி அணியை வென்றது ஸ்கோர் 09-04.

உத்தர்கண்ட் ஜார்கண்ட்  அணியை வென்றது ஸ்கோர்:08-02 பஞ்சாப் அணியை திரிபுரா அடி வென்றது ஸ்கோர்:15-01. பீகார் தரநகர் ஹவேலியை வென்றது. ஸ்கோர்:33-11. மத்தியப்பிரதேசம் சண்டிஹாரை வென்றது. ஸ்கோர்-09-07.டெல்லி பீடோடிசா அணியை வென்றது ஸ்கோர்:26-11. குஜராத்தை வென்றது தமிழ்நாடு அணி ஸ்கோர் : 19-18 கேரளா மும்பையை வென்றது. ஸ்கோர்: 16-01.ஹரியானா அணியை ஹிமாச்சல் அணி வென்றது ஸ்கோர்:24-08. இப்போட்டிகள் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வரை ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து