எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.
ரொனால்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டநிலையில், பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். 'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். மேலும், குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து ரவி சாஸ்திரி
விராட் கோலி பார்மில் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்றும், அவர் பார்மில் சற்று பின்தங்கி மட்டுமே இருக்கிறார் எனவும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முதல் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளாக அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தபோது முதல் பாதியில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடியதால் இரண்டாவது பாதியில் அவருக்கு விருப்பமான சுதந்திரமான ஷாட்களை விளையாட முடிந்தது.
இதன் காரணமாக அவர் சதம் அடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். அதே போன்று விராட் கோலியும் நான்காவது போட்டியின் போது முதல் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆரம்பத்தில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடினால் அதன் பிறகு அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும். தற்போது அவர் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை. ஏனெனில் விராட் கோலி போன்ற வீரர் பார்மில் சற்று பின்தங்கி இருக்கிறாரே தவிர அவர் பார்ம் அவுட் என்பதெல்லாம் கிடையாது. நிச்சயம் விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நமன் ஓஜாவின் தந்தைக்கு சிறை
கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு
25 Dec 2024மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின்
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்
25 Dec 2024மெல்போர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் சமனில்...
-
ஆலோசனைகளை வழங்கி இளம் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
25 Dec 2024மெல்போர்ன்: இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை - ரோகித் சர்மா
-
தேசிய 46-வது மகளிர் கைப்பந்து போட்டி: சுழற்சி லீக்போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதி
25 Dec 2024திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2024.
26 Dec 2024 -
அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2024சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு
26 Dec 2024சென்னை, பொங்கல் பண்டிக்கைக்கு வழங்க வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம்: மதுரை மற்றும் கோவை கோயில்களில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
26 Dec 2024சென்னை, கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கா
-
200 தொகுதிகளை தாண்டி வெல்லும் நிரந்தர கூட்டணி தி.மு.க. கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
26 Dec 2024சென்னை, “தி.மு.க.
-
சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
26 Dec 2024சென்னை, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
26 Dec 2024புதுடெல்லி, பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி விவகாரம் எதிரொலி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு
26 Dec 2024குனியமுத்தூர், 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
-
சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
26 Dec 2024புதுச்சேரி, சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Dec 2024சென்னை, தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்
26 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி
26 Dec 2024சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு
26 Dec 2024திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
-
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன்கள் பெற ஏற்பாடு
26 Dec 2024திருமலை: திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்காக 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம்
26 Dec 2024சண்டிகர், 2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சைபர் தாக்குதலால் ஜப்பானில் விமான சேவை பாதிப்பு-பயணிகள் சிரமம்
26 Dec 2024டோக்கியோ, பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸ் மீதான சைபர் தாக்குதல் அதன் சேவையை பாதித்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
-
ஒடிசாவில் மருத்து மாணவர் தற்கொலை
26 Dec 2024புவனேஸ்வர், ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2023- 2024-ல் பா.ஜ. கட்சி பெற்ற தேர்தல் நன்கொடை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்
26 Dec 2024டெல்லி, 2023 - 2024 நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.