முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டமிட்டு விதிமீறல் செய்கிறார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் கவர்னர் ஆர்.என்.ரவி குறியாக உள்ளார் என்றும் தமிழ்நாடு வளர்வதை அவரால்  ஜீரணிக்க முடியவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக சட்ட சபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது  அவர் கூறுகையில், "அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் சட்டசபையில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களைக் கூறி சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் சென்றார். 2022-ல், இப்போது இருக்கும் கவர்னர் தனது உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. 

ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு வளர்ந்துவருவதை கண்டு அவரால் ஜீரணிக்க முடியவில்லை என நினைக்கிறேன். சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை கவர்னர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து