எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முழு உழைப்பை தந்து ஆட்சி நடத்தி வருகிறோம் என்று சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவையே விடியல் ஆட்சியின் சாட்சி என்றும் 7-வது முறையாக தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி குறித்து விளக்கம் அளித்தார். இதுகுறித்து பேசிய அவர், "ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு தி.மு.க.வுக்கு தான் உண்டு. நிச்சயமாக கூறுகிறேன். 7வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக தி.மு.க. அமையும். அதன் அடித்தளமாக அமைந்த இந்த ஆட்சி விடியல் ஆட்சியாக அமையும் என கூறினோம்.
நான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி. மகளிர் விடியல் பயணம் மேற்கொள்வோர் 'ஸ்டாலின் பஸ்' என்று அழைப்பதுதான் விடியல் ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், முழு உழைப்பை தந்து ஆட்சி நடத்தி வருகிறோம். அடுத்து அமையப்போகும் அரசும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதில், எங்களுக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும் சந்தேகமில்லை.
போராட்டம் நடத்துவது தவறல்ல. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அனுமதியோடு போராட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை மேம்படுத்தும் பணியை தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடுதான்... தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றிச்சுற்றி வருகிறது.
புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அன்போடு என்னை 'அப்பா... அப்பா' என வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மாதம்தோறும் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி உள்ளோம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். இவைதான் விடியலின் சாட்சி.
அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. திராடவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலர் பயப்படுகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியே திராவிட மாடல். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு 5.4 சதவீதம் ஆக உள்ளது. தற்போது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் விடியல் எங்கே என கேட்கின்றனர்? விடியல் மக்களுக்காகதான், மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் அடையாளம்தான் விடியலின் ஆதாரம். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவையே விடியல் ஆட்சியின் சாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 weeks ago |
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Jan 2025சென்னை : தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-01-2025
26 Jan 2025 -
டெல்லியில் குடியரசு தின விழா: பிரமிக்க வைத்த முப்படைகளின் அணிவகுப்பு-அலங்கார ஊா்திகள்
26 Jan 2025புதுடெல்லி : குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
-
கவர்னர் தேநீர் விருந்து: த.வெ.க. புறக்கணிப்பு
26 Jan 2025சென்னை : ராஜ்பவனில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை த.வெ.க. புறக்கணித்துள்ளது.
-
வேட்பு மனு தொடர்பான வழக்கு: இ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
26 Jan 2025புதுடெல்லி : வேட்பு மனு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீ்ட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
இலங்கைக் கடற்படையினரால் தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Jan 2025சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில்,
-
டாக்டர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
26 Jan 2025சென்னை : பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழா: வாகா எல்லையில் கோலாகலம்
26 Jan 2025புதுடில்லி : வாகா எல்லையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை : த.வே.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
26 Jan 2025சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங
-
வங்கதேச பொதுத்தேர்தல்: ஹசீனா கட்சிக்கு அனுமதி மறுப்பு
26 Jan 2025வங்கதேசம் : வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது
-
பத்ம விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித், அஸ்வினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
26 Jan 2025சென்னை : பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம்: ஜனாதிபதி முர்மு
26 Jan 2025சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 568 கூடுதல் இ.வி.எம். ஒதுக்கீடு
26 Jan 2025ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
இன்று முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Jan 2025சென்னை : இன்று முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார்.
-
குடியரசு தின விழாவில் பரபரப்பு: கவர்னர் உரையாற்றும் போது மயங்கி விழுந்த கமிஷனர்
26 Jan 2025திருவனந்தபுரம் : குடியரசு தின விழா மேடையில் திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் முன்பக்கமாக சரிந்து விழுந்தார்
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது
26 Jan 2025ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 33 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
மாணவி பலாத்கார வழக்கு: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Jan 2025புதுடெல்லி : அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
-
கிரீன்லாந்து தீவு விவகாரம்: அமெரிக்கவிடம் டென்மார்க் திட்டவட்டம்
26 Jan 2025வாஷிங்டன் : கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என்று அமெரிக்க அதிபரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
-
அரசியலமைப்பு சட்டத்தை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து
26 Jan 2025சென்னை : நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம் என்று நாட்டின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டங்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்
26 Jan 2025சென்னை : டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
-
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
26 Jan 2025போர்ட் சூடான் : சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
76-வது குடியரசு நாள்: சென்னையில் தேசியக்கொடி ஏற்றினார் தமிழ்நாடு கவர்னர் ரவி
26 Jan 2025சென்னை : குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்ற நிலையில், 76-வது குடியரசு நாளையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.
-
மக்களாட்சியின் விழுமியங்களை காப்போம்: எடப்பாடி பழனிசாமி
26 Jan 2025சென்னை : அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம். என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
-
மகளிர் டி-20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி
26 Jan 2025கோலாலம்பூர் : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய மகளிரணி முன்னேறியுள்ளது.
64 ரன்னில் ஆல் அவுட்
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 11-வது முறை தீர்மானம் நிறைவேற்றம்
26 Jan 2025காஞ்சிபுரம் : பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் 11ஆவது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.