முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி?

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் தலைநகராக உள்ள டெல்லியில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் ஆளுமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் தேர்தலை முன்னிட்டு தீவிர பணியாற்றும்படி கட்சி தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் வரலாற்றை எடுத்து கொண்டால், 2013-ம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த கெஜ்ரிவால், 49 நாட்களுக்கு பின்னர் பதவி விலகினார். இதன்பின்பு, 2015-ம் ஆண்டு தேர்தலிலும், 2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக, முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் நிறுத்தப்பட்டு உள்ளார்.

இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அடங்கிய கட்சி கூட்டம் ஒன்றும் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆம் ஆத்மிக்கு திரிணாமுல் காங்கிரசும், சமாஜ்வாதியும் ஆதரவு அளித்துள்ளன. இதேபோன்று, உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வுக்கு முதல்-மந்திரி வேட்பாளர் யாரென்று அறிவிப்பது சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து