எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் நேற்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 (1)வது பிரிவில், பெண்ணை வன்புணர்ச்சி என்ற கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தற்போதைய தண்டனையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
64 (2) பிரிவின்படி, காவல் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பெற்ற ஒருவராலோ, நம்பிய நெருங்கிய உறவினரால் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு தற்போது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்படுகிறது. அது 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 65 (2)வது பிரிவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-வது பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
70 (1) வது பிரிவில், பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்ட தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 70 (2) வது பிரிவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.
71-வது பிரிவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கப்படுகிது. அது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 74-வது பிரிவில், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. 77-வது பிரிவின்படி, மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.
பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. திராவகம் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திராவகத்தை வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் எதற்கும் ஜாமீன் கிடையாது. குற்றவாளி உடனே கைது செய்யப்படுவார். ஆயுள் தண்டனை என்பது சிறையில் அவர் இயற்கையாக சாகும் வரை நீடிக்கும். பாரதீய நகரிக் சுரஷா சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின்படி, தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, அப்பீல் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு, மரண தண்டனையை தவிர மற்ற தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது. அப்பீல் தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு அவரை சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது.
குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும் வரை ஜாமீன் அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-01-2025.
11 Jan 2025 -
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? மேலிடப் பொறுப்பாளர் சென்னை வருகை
11 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.வில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சுமார் ஒரு லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசாணை வெளியீடு
11 Jan 2025சென்னை : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆனது
11 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
11 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்தது.
-
நிபந்தனையின்றி நேசிக்கிறேன்: ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித் உருக்கம்
11 Jan 2025துபாய் : என் ரசிகர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
-
கொள்கை மாற்ற விவகாரம்: மெட்டாவுக்கு பிரேசில் கெடு
11 Jan 2025பிரேசிலியா : மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரத்தில் 72 மணிநேர பிரேசில் காலக்கெடு விதித்துள்ளது.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல், மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Jan 2025அவனியாபுரம், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி?
11 Jan 2025புதுடெல்லி : பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
11 Jan 2025சென்னை : சன்னையில் ஆபரத்தின் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ. 240விலை உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையானது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுமாம்
11 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் மீட்பு
11 Jan 2025கவுகாத்தி, அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய விசயங்கள்
11 Jan 2025சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. போட்டி
11 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.
-
காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் 16 ஆயிரம் பேர் குவிப்பு
11 Jan 2025சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
-
திட்டமிட்டு விதிமீறல் செய்கிறார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
11 Jan 2025சென்னை : திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் கவர்னர் ஆர்.என்.ரவி குறியாக உள்ளார் என்றும் தமிழ்நாடு வளர்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி பொதுகூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் ராகுல்
11 Jan 2025டெல்லி, சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி நாளை பங்கேற்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை 15- ம் தேதி ஒத்திவைப்பு
11 Jan 2025பெங்களூரு : எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சத்தீஷ்கரில் சரணடைந்த 9 நக்சலைட்டுகளுக்கு 43 லட்சம் ரூபாய் பரிசு
11 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் நேற்று சரணடைந்தனர்.
-
பெரியார் குறித்த பேச்சால் 70 வழக்குகள் பதிவு: விரைவில் சீமான் கைது..?
11 Jan 2025சென்னை : பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Jan 2025சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்ன
-
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் ஆண்டு நிறைவு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
11 Jan 2025புதுடெல்லி : அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
மக்கள் சுப்ரீம் கோர்ட்டை இனி சுற்றிப்பார்க்கலாம்
11 Jan 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தது அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் அதில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
வி.சி.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: திருமாவளவனுக்கு முதல்வர் பாராட்டு
11 Jan 2025சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது திருமாவளவனின் உழைப்புக்கான அங்கீகாரம் என தி.