Idhayam Matrimony

வணங்கான் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      சினிமா
Vanagan-Review 2025-01-12

Source: provided

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம வணங்கான். V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அருண் விஜய் வாய் பேச இயலாதவராக இருக்கிறார்.தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய், தன் கண்முன் கொடுமைகள் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் நபராகவும் மாறிவிடுகிறார். இந்நிலையில் அருண் விஜய்க்கு ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிடி வேலை கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள இரண்டு நபர்களை அருண் விஜய் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்தது நான் தான் என, தானே முன் வந்து போலீசிடம் சரணடைகிறார். போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் எதற்காக இந்த கொலையை செய்தார்? ஏன் மறைகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

அருண் விஜய் வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது. அதே போல்  ரோஷ்ணி  பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.கௌரவ வேடத்தில் தோன்றும் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ். பின்னணி இசை மிரட்டல். மொத்தத்தில் வணங்கான் கலங்க வைத்து விட்டான். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து