முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரலோகேஷ்தான் அடுத்த முதல்வர்: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      இந்தியா
nara-lkesh

Source: provided

அமராவதி: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத். பேசியிருக்கும் கருத்து ஆந்திர அரசியலில்   அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார சம்மேளனத்தின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அவருடைய மகன் லோகேஷ் உள்பட அமைச்சர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், ஸுரிச் நகரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் அமைச்சர் லோகேஷை புகழ்ந்து பேசிய அமைச்சர் டி. ஜி. பரத், “சிலருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, லோகேஷ் தான் எதிர்கால தலைவர். அவர் முதல்வராகவும் மாறுவார் என்றார்.

ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் உள்ளார். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியினருக்கு, அவர் மீது அதிருப்தி நிலவி வருவதை கள நிலவரங்கள் பிரதிபலிக்கின்றன. இதனையடுத்து, அவருக்கு இணையான தலைவராக, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலரான அமைச்சர் லோகஷுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்று பேசி வருகின்றனர்.

இவ்விவகாரத்தால் ஆளும் கூட்டணியில் விரிசல் விழக் கூடாதென கவனமாகக் காய் நகர்த்தி வரும் சந்திரபாபு நாயுடு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து