முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகமும், உலகமும் காப்பாற்றப்பட வள்ளுவரை களவாட விடாமல் நாம் பார்த்துகொள்ள வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சிவகங்கை : வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்து வருவதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகமும், உலகமும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், வள்ளுவரை கபளீகரம் செய்யாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளர் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக திருச்சியிலிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை.,  குறள் நெறி பின்பற்றப்பட்டால்தான் தமிழகமும் காப்பாற்றப்படும், உலகமும் காப்பற்றப்படும். அப்படி காப்பாற்றப்பட வேண்டுமென்றால், வள்ளுவரை கபளீகரம் செய்யாமல் பார்த்துகொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்துவத்தைப் பேசிய மாமனிதர்களைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும். உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது” எனப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து