முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைஷ்னவி அபார பந்துவீச்சு: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
Woman 2024 07 24

Source: provided

கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி.20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெறும் 2.5 ஓவர்களில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது. 

ஹாட்ரிக் விக்கெட் 

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் விளையாடியது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மலேசிய அணியினர் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்தியா தரப்பில் 14-வது ஓவரை வீசிய வைஷ்னவி சர்மா அந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

31 ரன்களில் ஆல் அவுட்

வெறும் 14.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசியா 31 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக நுர் அலியா மற்றும் ஹுஸ்னா தலா 5 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் வைஷ்னவி சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

வெறும் 2.5 ஓவர்களில்... 

இதனையடுத்து 32 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. வெறும் 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் அடித்த இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் கோங்கடி திரிஷா 27 ரன்களுடனும், கமலினி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வைஷ்னவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து