எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா முதலிய துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும் மக்கள் பாதிக்கப்படாமல் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
2-வது விமான நிலையம்...
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மாநகரின் 2-வது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
1,005 குடும்பங்கள்...
இந்திய விமான ஆணையம் மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் டிட்கோ மேற்கொண்ட மேலும் விரிவான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், பின்வரும் காரணங்களுக்காக கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு பண்ணூரை விட பரந்தூர் தளம் மிகவும் பொருத்தமான தளமாக உருவெடுத்துள்ளது. பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில், பரந்தூரில் அதைவிட 500 குடும்பங்கள் குறைவாக 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றது.
செலவு குறையும்...
பண்ணூருடன் ஒப்பிடும் போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு குறையும். இந்த, அரசு பொறுப்பேற்றதற்கு முன்பாகவே, அதாவது 2020-ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் பரந்தூர் விமான நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்தின் மூலம் தொழில் வளர்ச்சி முதலான பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில்தான், விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் சென்னை மாநகரின் இரண்டாவது விமான நிலையத்தை அமைத்திட பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில்...
தற்போதைய சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டிற்கு 2 கோடி மக்கள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இது 3 கோடிக்கு மேல் அதிகரிக்கும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் 8 கோடி பயனாளிகள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் குறைகளை...
திராவிட மாடல் அரசு எப்போதும் மக்களின் நலன்களை முன்வைத்தே திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வெற்றிகண்டு மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்பது நாடே நன்கு அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாடு அரசு மக்களின் குறைகளைப் பரிவுடன் ஆராய்ந்து மக்கள் நலனைப் பாதுகாக்கும்.
கவனத்தில் கொள்ளும்...
பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும். பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் தமிழ்நாடு முதல்வர் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய, விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை
21 Jan 2025சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் விடிய விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
21 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
-
2021-ல் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு : அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
21 Jan 2025வாஷிங்டன் : 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் .
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-01-2025.
21 Jan 2025 -
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Jan 2025மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நிலச்சரிவு - வெள்ளம்: இந்தோனேசியாவில் 17 பேர் பலி
21 Jan 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
-
தஞ்சை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
21 Jan 2025தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
ஜகபர் அலி குடும்பத்திற்கு இழப்பீடு: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 Jan 2025சென்னை: கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சயிப் அலிகானை தாக்கியது எப்படி? நடித்துக்காட்டிய குற்றவாளி ஷரிபுல்
21 Jan 2025மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை தாக்கியது எப்படி என்று குற்றவாளி ஷரிபுல் நடித்து காட்டினார்.
-
மேலும் ஒருவரின் மனு தள்ளுபடி: ஈரோடு கிழக்கில் 46 பேர் போட்டி
21 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட தையடுத்து,
-
சிவகங்கையில் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்
21 Jan 2025சென்னை : மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.
-
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு மீண்டும் விளக்கம்
21 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விவேக் ராமசாமி திடீர் விலகல் - பின்னணி என்ன?
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாக
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு
21 Jan 2025கொல்கத்தா : இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு
21 Jan 2025மும்பை : மும்பை பங்குச்சந்தை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது.
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
நரலோகேஷ்தான் அடுத்த முதல்வர்: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
21 Jan 2025அமராவதி: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத்.
-
உ.பி., என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்
21 Jan 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கியூ.ஆர் கோடு முறையில் மார்ச் முதல் மது விற்பனை : சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
21 Jan 2025சென்னை : டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
21 Jan 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3.53 லட்சம் கோடி கடன் : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
21 Jan 2025சேலம் : கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் சாதனை, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் அரசு விடுமுறை
21 Jan 2025ஈரோடு : இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்வரிசை: இந்தியாவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் முக்கியத்துவம்
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடந்த டொனல்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்தியாவின் பிரதிநியாக சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர்
-
ஏ.எம். ரத்னம் வழங்கும் ஹரி ஹர வீரமல்லு
21 Jan 2025மெகா சூர்யா புரொடக்ஷன் ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஏ.எம்.
-
நவீன் D கோபால் இயக்கும் உசுரே
21 Jan 2025ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நவீன் டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் உசுரே.