முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ எல்லை பகுதிகளில் அவசர நிலை: டிரம்ப் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      உலகம்
Trump 2023 03 05

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, 

அமெரிக்க எல்லையையொட்டிய மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக பலர் அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகிறார்கள். சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும். சட்டவிரோத வகையில் குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும். உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது. அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

உலக நலனுக்காக கடவுள் தன்னை காப்பாற்றினார் என துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி டிரம்ப் குறிப்பிட்டு பேசினார். இந்த சம்பவத்தின்போது, அவருடைய காதில் துப்பாக்கி குண்டு உரசி சென்றது. இதன்பின்னரும், மற்றொரு முறை கோல்ப் விளையாட சென்றபோது, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருந்தும் டிரம்ப் உயிர் தப்பினார்.

அவர் தொடர்ந்து ஆற்றிய உரையின்போது,  இனி மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுடன் கூறினார். அமெரிக்கா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம். நம்முடைய மக்கள் உலகில் மிக சிறந்த குடிமக்கள் ஆவர் என்று டிரம்ப் தன்னுடைய உரையில் பேசியுள்ளார். உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதற்கு நானே சான்று என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து