முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
Eng 2024-03-26

Source: provided

கொல்கத்தா : இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி  வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தீவிர பயிற்சி...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணி அறிவிப்பு...

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நாளைய போட்டியில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் பில் சால்ட் களம் இறங்குகின்றனர். அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜாஸ் பட்லர், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் களம் இறங்குகின்றனர். இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பராக பில் சால்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கி. அணி விவரம்:

இங்கிலாந்து விளையாடும் அணி விவரம்: பென் டக்கட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து