முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார்.

நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதியில்தான் தொடங்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இதற்காக, கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்த டிரம்பை, ஜோ பைடன் கைகுலுக்கி வரவேற்றார். கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெறும் என முன்பே தெரிவிக்கப்பட்டது. இது மிக பெரிய, வட்ட வடிவிலான அறையாகும்.

இதன்படி, கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். கடுமையான வானிலையால், கடந்த 1985-ம் ஆண்டு ரொனால்டு ரீகனும் இதேபோன்று மூடிய அறையில் பதவியேற்று கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். டிரம்புக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியும் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து