முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான தோல்வி: இலங்கை 6-வது இடத்திற்கு சரிவு

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      விளையாட்டு
Sri-Lanka 2024-07-08

Source: provided

காலே : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல்  போட்டியில் தோல்வி  அடைந்ததையடுத்து டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை ஒரு இடம் பின்தங்கியது. 

இலங்கை பாலோ ஆன்....

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியது.

ஆஸ்திரேலியா வெற்றி....

இதனால் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் புள்ளிப்பட்டியல்

1) தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்).

2) ஆஸ்திரேலியா (65.74 சதவீதம்).

3) இந்தியா (50.00 சதவீதம்).

4) நியூசிலாந்து (48.21 சதவீதம்).

5) இங்கிலாந்து (43.18 சதவீதம்).

6) இலங்கை (41.67 சதவீதம்). 

7) வங்காளதேசம் (31.25 சதவீதம்).

8) வெஸ்ட் இண்டீஸ் (28.21 சதவீதம்).

9) பாகிஸ்தான் (27.98 சதவீதம்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து