முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி முன்னிலை

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் டோகோவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சசிகுமார் மற்றும் ராம்குமார் வெற்றி பெற்றனர்.  டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா- டோகோ இடையிலான 2 நாள் ஆட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், டோகோவின் லியோவா அயிட் அஜாவோன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சசிகுமார் 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன், டோகோவின் தாமஸ் செடோட்ஜி உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ராம்குமார் 6-0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு 2-வது புள்ளியை பெற்றுக்கொடுத்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

______________________________________________________________________________________________

பாக். வீரர்களுக்கு அறிவுரை  

எதிர்வரும் சாம்பியஸ் டிரோபி போட்டி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இம்முறையும் இந்திய அணியே வெற்றி பெறும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக சமீப கால தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மொயீன் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே கடைசியில் பாகிஸ்தான் அணிக்கு பலவீனமாக அமைந்து தோல்வியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே நீங்கள் வெற்றி பெற இந்திய அணியினருடன் நட்பை ஆற்றாமல் விளையாடுங்கள் என்று அவர் பாகிஸ்தானுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________________________

காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் தோல்வி அடைந்தார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் , சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் மோதினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.  மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-19, 18-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷூயான் சென் சூவிடம் தோல்வி அடைந்தார்.

______________________________________________________________________________________________

இந்திய அணி மீது அதிருப்தி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி புனே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், துபேவுக்கு மாற்று வீரராக ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. ஒன்று துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசுபவராக இருக்க வேண்டும் அல்லது ராணா சிறப்பான பேட்டராக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இணையான மாற்று வீரராக கருத முடியும். 

இதுகுறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் பேட்டிங் பிடிக்க வந்தபோது யாருக்கு பதிலாக ராணா என்ற குழப்பம் நீடித்தது. பிறகுதான் துபேவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.  நான் நடுவரிடம் முறையிட்டபோது, போட்டி நடுவர் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துவிட்டனர். அதன்பிறகு பேசுவதற்கான வாய்ப்பில்லாமல் போனது. இது ஆட்டத்தில் ஒரு பகுதி என்றாலும், போட்டி நடுவரிடம் முறையிட்டு முறையான விளக்கத்தை பெறுவோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து