முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா போல் மிமிக்ரி செய்து சீமான் ஓட்டு வேட்டை

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Seaman 2024-02-17

Source: provided

ஈரோடு : முன்னாள் முதல்வர் அண்ணா போல் பேசி,  சீமான்  பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசார மேடையில் அவர் முன்னாள் முதல்வர் அண்ணா  போன்று மிமிக்ரி செய்து காட்டி தொண்டர்களை குஷிப்படுத்தினார். அவர் பிரசாரத்தில் பேசியதாவது;

ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மதிப்புமிக்க உரிமை, கடைசி வாய்ப்பு ஓட்டு போடுவது. காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு ரூபாய் என ஓட்டுக்கு காசு கொடுத்தார்கள் என்று கூறுகின்றனர். அதை முன்னாள் முதல்வர் அண்ணா பேசினார்.

காங்கிரசார் (அண்ணா குரலில் பேசுகிறார்) ஓட்டுக்கு காசு கொடுப்பானேன்.  அந்த காசை வாங்கிக் கொண்டு என்னிடத்தில் ஓட்டு போட வேண்டும் என்று ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிற வெங்கடாசலபதியை அழைத்துக் கொண்டு அந்த பணத்தில் அடித்து சத்தியம் வாங்குவானேன் இந்த காங்கிரசார் என்று அண்ணா பேசியது இருக்கிறது. 

அந்த காங்கிரசாருக்கு சேர்த்து அண்ணா  பெயரை சொல்லி ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கும் வேலையை செய்வதுதான் இந்த திராவிடம். தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா? என்று அண்ணா சொல்கிறார். அந்த மதிப்புமிக்க தங்கத்தை தவிட்டுக்கு வாங்குவது திராவிடம். அம்பேத்கர் அன்றைக்கு மதிப்புமிக்க ஓட்டுகளை சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானம் என்றார்.

ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அந்த காசை வாங்கி கொண்டு ஓட்டு போடுபவன் தேசத்துரோகி என்று முத்துராமலிங்கத்தேவர் கூறியிருக்கிறார். ஜனநாயகத்தை கேடுகெட்ட பணநாயகத்துக்கு அடமானம் வைப்பது என்பது போராடி விடுதலை பெற்று தந்த நமது முன்னோர்களை அவமதிப்பதற்கு சமமாகி விடும். இவ்வாறு சீமான் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து