எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வடசென்னை வளர்ச்சித் திட்ட நிதி ரூ.6400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, 712 பேருக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கி அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று (பிப்.19) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, எப்படி இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல், இந்த வடசென்னைப் பகுதியையும் மாற்றிட வேண்டும், அதைவிட பெரிதாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காகதான் தி.மு.க. அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறுத் திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
முதலில் வடசென்னை பகுதிக்காக சட்டமன்றத்தில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்று நான் அறிவித்தேன். இப்போது 1000 கோடி அல்ல, 6400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கலாம். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
புதுமைப் பெண் என்கிற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல. தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என்ற பெயரிலே காலை உணவினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்கு காரணம். இதுஎல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் சார்பில்தான் இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு வீடுகளை உருவாக்கித்தந்து அதற்கு தேவையான சலுகைகளை, நீங்கள் எந்த அளவுக்கு சலுகைகளை எதிர்பார்த்தீர்களோ, அதைவிட அதிகமான சலுகைகளை இந்த அரசு உங்களுக்கு வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஆட்சியை இன்றைக்கு உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025 -
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்: கமல்ஹாசன்
21 Feb 2025சென்னை : ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
21 Feb 2025திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
21 Feb 2025ராமேசுவரம் : பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
-
தமிழகம் வரும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அமெரிக்கா நிதி: மத்திய வெளியுறவுத்துறை கவலை
21 Feb 2025புதுடெல்லி : இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் த
-
சாஹல் - தனஸ்ரீ தம்பதி விவாகரத்து
21 Feb 2025மும்பை : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.