எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் நேற்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று முன்தினம் (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் நேற்று பொறுப்பேற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட முதல் செய்தியில், "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் பணி வாக்களிப்பது. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், எப்போதும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையர்:
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவு கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். தேர்வு குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் நீடிக்கலாம். இதன்படி புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் 2029-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 2027-ம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்பார்வையில் நடைபெறும்.
தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி:
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதற்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா) முடிவின்படி ஹரியானா தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1966-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி உத்தர பிரதேசத்தில் விவேக் ஜோஷி பிறந்தார். அவருக்கு தற்போது 58 வயதாகிறது. வரும் 2031-ம் ஆண்டு வரை அவர் பதவியில் நீடிப்பார். மற்றொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து வரும் 2028-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே ஞானேஷ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியே பதவியேற்பார். வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் இந்த விவேக் ஜோஷி: கடந்த 1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஞானேஷ் குமார் பிறந்தார். கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார்.
கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவ ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். இறுதியாக கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025 -
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்: கமல்ஹாசன்
21 Feb 2025சென்னை : ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழகம் வரும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
21 Feb 2025ராமேசுவரம் : பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
21 Feb 2025திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்தியாவுக்கு அமெரிக்கா நிதி: மத்திய வெளியுறவுத்துறை கவலை
21 Feb 2025புதுடெல்லி : இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் த
-
அதிகார துஷ்பிரயோகம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இயக்குநர் ஷங்கர் கண்டனம்
21 Feb 2025சென்னை : எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்கு