முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழியை திணிக்கும் எண்ணமில்லை; கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் : முதல்வருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புதுடெல்லி : மும்மொழிக்கொள்கை தொடர்பாக நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்பது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாகும். லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக தாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். 

இதற்கு பதில் கடிதமாக, தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கை தொடர்பாக நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.பிரதமர் மோடிக்கு நீங்கள் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) எழுதிய கடிதம் கூட்டாட்சி தத்துவத்தின் அம்சங்களுக்கு எதிரானது. சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு மாற்றங்களை செய்யும் சீர்திருத்தங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக்கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. தேசிய கல்விக்கொள்கை நமது மொழியியல், கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க அமல்படுத்தப்படுகிறது.எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாநில கல்விச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை செய்யும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமக்ர சிக்ஷா, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக்கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உறுதியாக உள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தேசியக்கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என  முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து