முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் : இந்திய அணிக்கு யுவராஜ் அட்வைஸ்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      விளையாட்டு
Yuvraj-Singh 2024-08-20

Source: provided

மும்பை : இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியது முடியும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

வரவேற்பு...

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நெருக்கடி...

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றால் ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

யுவராஜ் சிங் எச்சரிக்கை...

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஒரு பாகிஸ்தான் வீரர் நினைத்தால் கூட இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் உள்ளது. ஏனெனில் அவர்கள் அங்கு அதிகமான போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்ற ஷாகீன் அப்ரிடியின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.

மூழ்கடித்து விடாமல்... 

ஆனால் பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் குறைவாக இருந்தாலும் ஒரு வீரர் நினைத்தால் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியதாகும். இறுதி நாளில் இதனை சிறப்பாக செய்யக்கூடிய அணி வெற்றி பெறும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து