முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக 14 ஆயிரம் ரன்கள்: சாதனை படைக்கிறார் கோலி

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

துபாய் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான  போட்டியில் விராட் மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். 

இந்தியா - பாகிஸ்தான்... 

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது.

அரையிறுதி வாய்ப்பு...

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதேவேளையில், இன்று பாகிஸ்தானை வீழ்த்தினால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால் இந்திய அணியும் முழு வீச்சில் தங்களது திறனை வெளிப்படுத்தும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

காத்திருக்கும் கோலி...

இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அதாவது, இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 298 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் 286 இன்னிங்ஸ்களில் களம் இறங்கி 13 ஆயிரத்து 985 ரன்கள் அடித்துள்ளார். இதில் 50 சதம் மற்றும் 73 அரைசதம் அடங்கும்.

அதிவேகமாக 14,000... 

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே உள்ளனர். சச்சின் தனது 350-வது இன்னிங்சில் 14,000 ரன்களையும், சங்கக்கார 378-வது இன்னிங்சில் 14,000 ரன்களையும் கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து