முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
Nagai-Sri-Lanka 2023-10-08

நாகப்பட்டினம், நாகை - இலங்கை இடையே  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தமிழ்நாட்டின் நாகை - இலங்கையின் காங்கேசன் துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை விலகிய நிலையில் இம்மாதம் 12-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்கும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் கப்பலை இயக்க முடியவில்லை. பின்னர் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் நேற்று காலை சிவகங்கை கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.

நேற்று காலை ஏழு முப்பது மணிக்கு புறப்பட்ட கப்பலில் 83 பயணிகள் இலங்கைக்கு பயணித்தனர். மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் கொடியசைத்து கப்பலின் பயணத்தை தொடங்கி வைத்தனர். இக்கப்பல் இனி செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயக்கப்பட உள்ளது. இக்கப்பலில் பயணிக்க இரு மார்க்கத்திற்கும் சேர்த்து கட்டணம் 8500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பையில் 10 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். முன்பதிவு, டிக்கெட் கட்டணம், லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்கள் அவர்களது http://www.sailsubham.com/ என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து