முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரிஷியஸ் தேசிய தின விழா: பங்கேற்கிறார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      இந்தியா
Modi PM 2024-12-20

போர்ட் லூயிஸ்,  மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்துள்ளார்.

மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நவீன் ராம்கூலம், “எனது அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நமது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார் என்பதை அவைக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர் பணிகள் மற்றும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கான சமீபத்திய பயணங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி நமது நாட்டுக்கு வருகை தர ஒப்புக்கொண்டுள்ளார்.

இத்தகைய புகழ்பெற்ற ஆளுமையை வரவேற்கும் வாய்ப்பு நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு தனித்துவமான பாக்கியமாகும். மோடியின் வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார். மார்ச் 12 ஆம் தேதி மொரிஷியஸ் தனது தேசிய தினத்தைக் கொண்டாடவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான மொரீஷியஸுடன் இந்தியா நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. வரலாறு, மக்கள்தொகை மற்றும் கலாச்சாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மிக வலிமையான பிணைப்பு உள்ளது. மொரிஷியசின் 12 லட்சம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து