முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நீரின் அற்புத சக்தி: ஆய்வு முடிவை வெளியிட்டது உ.பி. அரசு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      இந்தியா
kumbamela

பிரயாக்ராஜ், கங்கை நீர், தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் அதி அற்புத சக்தி கொண்டிருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றை  உ.பி. அரசு வெளியிட்டுள்ளது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்றிணையும் இடத்தில், மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 58 கோடியை தொட்டுவிட்ட நிலையில், நாள்தோறும் அந்த நீரை ஆய்வுக்கு உள்படுத்தி வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த சில நாள்களுக்கு முன்பு, திரிவேணி சங்கம நீர் குளிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது என்றும், மனிதக் கழிவுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகியிருப்பதாகவும் எச்சரித்திருந்தது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை, கங்கை நீரைக் குடிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், ஒரு விஞ்ஞானியின் பெயரை மேற்கோள்காட்டி உ.பி. அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், நதி நீர் தூய்மையான "புனித நீரைப் போல" இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தூய்மை குறித்து சந்தேகத்தை எழுப்பிய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளுக்கு எதிராக இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது.

அதாவது, பத்ம ஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோங்கர் என்பவர்தான், கங்கையின் ஐந்து இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வு செய்திருக்கிறார். அதில் ஒரு பாக்டீரியாவும் இல்லை என்றும், அதனை ஒரு சில நாள்கள் எடுத்து வைத்திருந்த பிறகும் ஆய்வு செய்து பார்த்ததாகவும், அப்போதும் அதில் பாக்டீரியா வளரவில்லை என்றும் கூறியிருந்ததை உ.பி. அரசு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அதாவது, 58 கோடி பக்தர்கள் நீராடிய பிறகும் கூட, கங்கை நீர், தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் அதி அற்புத சக்தி கொண்டிருப்பதாகவும் அறிக்கை நிறைவு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து