முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைகளுக்கு கொண்டு வந்த உ.பி. அரசு கும்பமேளா நீரில் புனித நீராடிய கைதிகள்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      இந்தியா
kumbamela

Source: provided

லக்னோ : உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்கச் செய்துள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சிறிய தொட்டிகளில் வழக்கமான தண்ணீருடன் கலக்கப்பட்டு கைதிகள் புனித நீராடி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைதிகள் அவற்றில் புனித நீராடினர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது: சங்கம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனித பூமியில், உத்தரப் பிரதேசம் வரலாற்றைப் படைத்துள்ளது. 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களைப் பெற்றுள்ளனர். அதே பாதையைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், அங்கிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்ட கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து