முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வெல்லும்: கங்குலி உறுதி

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில்  பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார். ஏனெனில் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தொடர் முழுவதிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியில் 1 முதல் 5 வரை 5 சுப்மன் கில்கள் இருக்கிறார்கள். அதாவது அந்த இடத்தில் விளையாடும் நமது அனைத்து பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடினால் நீங்கள் இந்திய அணியில் இருக்கும் திறமையின் ஆழத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இல்லை. இத்தொடர் முழுவதையும் அவர்கள் வெல்லும் அணியாக இருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் வெற்றி பெறுவது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது. நமது ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். இந்தியா அதே பவுலிங் கலவையுடன் விளையாடும் என்று நம்புகிறேன். துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. அங்குள்ள ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் என்று எனக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் சுழலை நன்றாக எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

__________________________________________________________________________________

இந்தியா - பாக். போட்டி நேரலை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் இன்று (பிப்ரவரி 23) நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களம் காண்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: துபையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________

கிரிக்கெட் மீதான காதல்: டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடர் என்று அனைவரும் நினைத்த வேளையில் அடுத்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் கடினமான ஐ.பி.எல். தொடரில் வயதிற்காக எந்த கருணையும் கிடைக்காது என்று டோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- 

வருடத்தில் நான் சில மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். ஆனால் அதை விளையாட தொடங்கிய கால கட்டத்தை போல் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அதுவே என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது.  சர்வதேச கிரிக்கெட்டை நான் விளையாடத் தொடங்கியபோது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பற்றி பெரிய பின்புலம் இல்லாத மாநிலத்தில் இருந்த வந்த எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் நாட்டுக்காக பங்காற்ற விரும்பினேன். எனக்கு நாடு மட்டுமே முக்கியமாக இருக்கும். நானும் நம் நாட்டின் வெற்றி பெற்ற அணியில் அங்கமாக இருக்க விரும்பினேன்.  இப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டேன். அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீதான எனது காதல் அப்படியே தான் இருக்கும்" என்று கூறினார்.

__________________________________________________________________________________

பாக்.கில் ஒலித்த இந்திய தேசிய கீதம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில்  லாகூரில் நேற்று நடைபெற்ற   ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் போட்டியின்   போது இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. 

சிறிது ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து