முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
Kamal 2023-09-19

Source: provided

சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஓடிடி மற்றும் வெளியீட்டு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல் ஹாசனிடம், “தக் லைப்பில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் நல்லவரா இல்லை கெட்டவரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல்,“கணக்கிற்கு கூட்டல் முக்கியமா இல்லை கழித்தல் முக்கியமா என்றால் எதை சொல்ல முடியும்? நல்லதும் கெட்டதும் இணைந்ததுதான் தக் லைப்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 17 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 17 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 15 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து