முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் கல்லூரி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
BUS 2024-08-30

Source: provided

வேலூர் : வேலூரில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கல்லூரி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் காட்பாடி அடுத்து ஆற்காடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் வெள்ளிக்கிழமை நிறுத்தி விட்டு திங்கட்கிழமை பஸ்சை இயக்குவது வழக்கம். இந்நிலையில் நிறுத்தி விடப்பட்டிருந்த பஸ்சில்  நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இதைக் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த காட்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும்  நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்ல. இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் சேதமடைந்தது.

திடீரென கல்லூரி பஸ் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 17 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 17 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 15 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து