முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் இரா.கோபால் உள்ளிட்ட இருவருக்கு கலைஞர் எழுதுகோல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      தமிழகம்
stalincm

Source: provided

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’, நக்கீரன் எனும் பெயரில் புலனாய்வு இதழினைத் தொடங்கி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்திவரும் நக்கீரன் ரா. கோபாலுக்கு வழங்கிடவும்; கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாகப், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கிட முதலல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபாலுக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக சுகிதா சாரங்கராஜுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

இந்த நிகழ்வில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், துறையின் செயலா் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா. வைத்திநாதன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து