முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்து மொழிகளை ஊக்குவிக்க போகிறேன்: ஆந்திரா முதல்வர்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

Source: provided

ஆந்திரா: ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அவர் பேசியதாவது:-

முந்தைய ஆந்திர அரசு ஆங்கிலத்தை மட்டுமே ஊக்குவித்தது. ஆங்கிலம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்ற வகையில் ஊக்குவித்து வந்தது. ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலகளவில் பிரசித்து பெற்று வருகின்றன. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு ஹிந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான்.

ஆந்திரத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மூன்று மொழிகள் அல்ல, பல மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். அதனை படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வேலை செய்து பயன்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து