முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

உக்ரைன்: உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களை போரின் தொடக்கத்தில் கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து இழந்த பெரும்பாலான பகுதிகளை மீட்டது. தற்போது உக்ரைன் மீது ரஷியா அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்போது டொனால்டு டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படடது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரஷியா அதை மீறாமல் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்? என ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார். அதேவேளையில் அமெரிக்கா உக்ரைனுக்கு எவ்வளவு உதவி செய்துள்ளது. இதற்கான அமெரிக்காகவுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. உக்ரைன் வீரர்கள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஜெலன்ஸ்சியை டிரம்ப் சாடினார். 

இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதற்கிடையே உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா தடாலடியாக நிறுத்தியது. குறிப்பாக ராணுவ புலனாய்வு உதவியை நிறுத்தியது. இது ரஷியா ராணுவத்தின் நகர்வு மற்றும் அதன் மீதான இலக்கு ஆகிவற்றிற்கு உதவி செய்து வந்தது. 

இந்த நிலையில் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸடியன் லெகோர்னு கூறுகையில் "எங்களுடைய புலனாய்வு இறையாண்மை கொண்டது. நாங்கள் புலானாய்வை கொண்டுள்ளோம். அதை உக்ரைன் பயனடைய நாங்கள் அனுமதிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா உதவியை நிறுத்தியதால், அதை ஈடுசெய்யும் அளவிற்கு பல்வேறு உதவி தொகுப்புகளை விரைவுப்படுத்துங்கள் என அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் முடிவால் போலந்தில் இருந்து உக்ரைனுக்கு கப்பலில் செல்லக்கூடிய உதவிப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமாக மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த போரில் எவ்வாறு போரிட வேண்டும் என்று உக்ரைன் மக்கள் கற்றுக்கொண்டுள்ளனர். மேலும், பொருட்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் எனவும் தெரிந்து கொண்டனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து