முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: 12 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      தமிழகம்
Tamilnadu 2024-12-21

Source: provided

நெல்லை: வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு வேளாண்மைக்கு என ஆண்டுதோறும் தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கை வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் இடம் பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பான விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நெல்லையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆண்டுதோறும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் 5-வது வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து