முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் மீது தேவையற்ற அழுத்தம்: முன்னாள் வீரர் கும்ப்ளே வருத்தம்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      விளையாட்டு
Anil-Kumla 2024-01-30

மும்பை, கே.எல்.ராகுல் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது என்று  முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை...

இது குறித்து கும்ப்ளே பேசுகையில்,  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கு ‘நிறைய நம்பிக்கையை அளித்திருக்கும்’. அக்சர் படேல் விக்கெட் விழுந்தவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். 34 பந்துகளில் 42 ரன்களை அவர் அடித்ததோடு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார். 

நல்ல வேலை... 

“அக்சர் படேலுக்கு முன்பாக ராகுல் களமிறங்க வேண்டும். அக்சர் படேல், விராட் கோலியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததில் நல்ல வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கே.எல்.ராகுல் அதே இடத்தில் இறங்கினாலும் அவரும் இதைச் செய்திருப்பார். அவர் 30 ரன்களை எடுத்தால் போதும் வெற்றி இலக்கைக் கடந்து விடலாம் என்பதை உறுதி செய்வார். இதை அவர் சீரான முறையில் செய்தும் வருகிறார்.

நழுவிப் போனது...

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாய்ப்பு அவருக்கு நழுவிப் போனது. ஆனால் ராகுல் ஒரு கிளாஸ் வீரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்னிங்ஸ் அவரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். அவர் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது, நன்றாக ஆடினால் ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால் ஒரு இன்னிங்சில் தோல்வி அடைந்தாலும் உடனே உலகமே அவருக்கு எதிராக திரண்டு எழுகிறது. அவர் விக்கெட் கீப்பிங்கிலும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிலும் தன் திறமையை எடுத்துக் காட்டியுள்ளார்” என்கிறார் அனில் கும்ப்ளே.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து