முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் பிரனாய் வெற்றி

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      விளையாட்டு
Prannoy-2025-03-06

பிரான்ஸ் நாட்டில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற 9-ந்தேதி வரை நடைபெறும். இதில், காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்திய வீரர்களான பிரனாய் மற்றும் ஆயுஷ் ஷெட்டி இருவரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். எனினும், கிரண் ஜார்ஜ் போட்டியில் தோல்வி கண்டார்.

இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஆடவர் ஒற்றையர் தொடக்க சுற்று போட்டி ஒன்றில், சீன தைபேவை சேர்ந்த வாங்கை 21-11, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோன்று மற்றொரு போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவை 21-17, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதன் 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரக்ஞானந்தா , அமெரிக்காவின் சாம் ஷன்லாந்த் மோதினர்.கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 43-வது நகர்த்தலில் டிரா செய்தார். அரவிந்த் சிதம்பரம் 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.

ஐதராபாத் அணியில் மாற்றம்

10 அணிகள் மோதும் 18-வது ஐ.பி.எல்.  தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸ் காயமடைந்தார். இந்த நிலையில், கட்டைவிரல் காயத்தால் ஐ.பி.எல்.  தொடரில் இருந்து விலகியுள்ள பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல்.  கோப்பையை வென்ற ஹைதராபாத் அணி, கடந்தாண்டு இரண்டாமிடம் பிடித்தது. 27 வயதான முல்டரை அந்த அணி ரூ.75 லட்சத்துக்கு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்காக வியான் முல்டர் 18 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து