Idhayam Matrimony

தமிழக காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
Stalin 2024-11-26

சென்னை, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம் என்று சட்டசபையில் நேற்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் காவல்துறையினருக்கு எதிராக களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் நேற்று கேள்வி நேரமும், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடந்தது. அப்போது மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு நேற்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சபாநாயகரை கை நீட்டி பேசுவது மரபல்ல. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டி.வி.யை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம். தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த மாநில விரோத சக்திகள், தமிழர் விரோத சக்திகள் முயற்சிக்கின்றன; தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து