Idhayam Matrimony

பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      உலகம்
Mark-Carney 2025-03-28

Source: provided

ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை அறிவித்தது. இது அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: அமெரிக்காவின் வரிகள் நியாயமற்றவை. ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதாகும். அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்கா இனி நம்பகமான கூட்டாளி இல்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் சில நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிந்து விட்டது. அமெரிக்க பொருட்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி மேலும் வரி விதிக்கப்படும். 

கனடாவை பலவீனப்படுத்த, நம்மை சோர்வடையச் செய்ய, அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் பல முயற்சிகள் செய்கிறது. இதை நான் நிராகரிக்கிறேன். அது ஒரு போதும் நடக்காது. சமீபத்திய வரிகளுக்கு எதிராக எங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம். வரி விதிப்பை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து