Idhayam Matrimony

ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      இந்தியா
Gajendra-Singh-Shekhawat 20

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024, ரெயில்வே திருத்த மசோதா-2024 ஆகியவை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. பிறகு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கும் நிறைவேற்றப்பட்ட பிறகு, மக்களவையில் நேற்று அந்த மசோதாக்களில், சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு என்பதற்கு பதிலாக, 76-வது ஆண்டு என்று திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தங்களுடன் மக்களவையில் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ''மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது தகவலின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜிதேந்திர சிங், ''கிராமப்புற மக்களும் தங்களது குறைகளை தெரிவிக்க வசதியாக, ஆன்லைன் குறைதீர்ப்பு இணையதளத்தை நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களுடன் இணைத்துள்ளோம். இதனால், 5 லட்சத்து 10 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் குறைகளை பதிவு செய்யலாம்'' என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து